உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி மேம்பாலத்தின் மீது மின் விளக்குகள் தேவை

புகார் பெட்டி மேம்பாலத்தின் மீது மின் விளக்குகள் தேவை

சென்னை - --பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி டிரங் ரோடு இணையும் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த வழியாக பூந்தமல்லி நகரத்திற்குள் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மேம்பாலத்தின் மீது மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து, இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. மேம்பாலத்தின் இறக்கத்தில் உள்ள சாலையோரம், மண் குவியல்கள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே, மேம்பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைத்து, மண் குவியல்களை அகற்றி பராமரிக்க வேண்டும்.-மா.தாமரை செல்வன், பூந்தமல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ