உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை நடுவே மின் கம்பம் சென்னீர்குப்பத்தில் அச்சம்

சாலை நடுவே மின் கம்பம் சென்னீர்குப்பத்தில் அச்சம்

பூந்தமல்லி,:சென்னை அருகே, பூந்தமல்லி ஒன்றியத்தில், சென்னீர்குப்பம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 11வது வார்டில் உள்ள பெரியார் நகர், ஐந்தாவது தெருவில், சாலையின் குறுக்கே இரும்பு மின்கம்பம் உள்ளது.இக்கம்பம், அந்த வழியே செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாகஉள்ளது. மேலும், இரும்பு மின்கம்பம் என்பதால், மழைக் காலங்களில் மின்சாரம் பாய்ந்து, விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகளும், அந்த வழியே செல்லும் மக்களும் அச்சமடைகின்றனர். சென்னீர்குப்பம் மின் வாரியத்தினர் கவனித்து, இந்த கம்பத்தை மாற்றிஅமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை