மேலும் செய்திகள்
மின்சார ரயில் பழுதால் சேவை 20 நிமிடம் பாதிப்பு
28-Apr-2025
பல்லாவரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, நேற்று காலை 8:15 மணிக்கு, பயணியருடன் சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் சென்றது.பல்லாவரம் ரயில் நிலையம் சென்றதும், பயணியரை ஏற்றுவதற்காக ரயில் நிறுத்தப்பட்டது. பின், பயணியர் ஏறியவுடன் புறப்பட்டபோது, பிரேக் பகுதியில் பழுது ஏற்பட்டு, பிரேக் ரிலீஸ் ஆகாததால், ஆறாவது பெட்டியின் கீழ் பகுதியில் இருந்து லேசாக புகை வந்தது.இதையடுத்து, தாம்பரத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையில், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின், பழுது சரிசெய்யப்பட்டு, காலை 8:35 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.தொடர்ந்து, பின்னால் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்களும், ஒன்றன் பின் ஒன்றாக கடற்கரை நோக்கி சென்றன.இச்சம்பவத்தால், தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை, 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
28-Apr-2025