மேலும் செய்திகள்
மின்மாற்றி எரிந்ததால் மெட்ரோ பணி நிறுத்தம்
25-Sep-2025
அண்ணா நகர்: கிழக்கு அண்ணா நகர் குடியிருப்பு மற்றும் பூங்கா பகுதியில், உயர் மின் அழுத்தம் காரணமாக, மின் பகிர்மான பெட்டியில், மின்வடங்கள் பட்டாசு போல் வெடித்தது, பெரும் பீதியை ஏற்படுத்தியது. கிழக்கு அண்ணா நகர், அஜந்தா காலனி, 'பி' பிளாக் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். நேற்று காலை 9:50 மணியளவில், இப்பகுதியில் இருந்த மின் வாரியத்தின் மின் பகிர்மான பெட்டியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சில நிமிடங்களில், மண்ணுக்குள் புதைந்திருந்த மின் வடங்களில் தீப்படித்து, பட்டாசு போல் வெடித்து சிதற துவங்கியது. தகவல் அறிந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் இணைப்பை துண்டித்தனர். அண்ணா நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், உயர் மின் அழுத்தத்தால், மின்வடங்கள் சூடாகி தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது.
25-Sep-2025