மேம்பால சுவரில் மோதி எலக்ட்ரீசியன் பலி
கிண்டி, சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் தீனதயாளன், 25; எலக்ட்ரீசியன். இவர், தன் நண்பர் விஜய், 26, என்பவருடன், நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி நோக்கி, டூ - வீலரில் சென்றார்.அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டூ - வீலர், அடையாறு கல்லாற்று மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.இதில், தீனதயாளன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த விஜய் கிண்டி நுாற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீனதயாளன் உடலை பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.