உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிக்கு சிறை

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிக்கு சிறை

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், அண்ணனுார் சோழன் நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. இவர் 2014ல் தன் வீட்டிற்கு, மும்முனை மின் இணைப்பு கோரி, ஆவடி தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.அங்கு வணிக ஆய்வாளராக இருந்த சிவகுமார், 53, என்பவர், 1,000 ரூபாய லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் சுரேஷ் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் அறிவுரைப்படி, சுரேஷ் 1,000 ரூபாய் வழங்கும்போது, சிவகுமார் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நேற்று நீதிபதி மோகன் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் சிவகுமாருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை