உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேத்துப்பட்டில் மின்னழுத்த பிரச்னை புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு

சேத்துப்பட்டில் மின்னழுத்த பிரச்னை புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு

சேத்துப்பட்டு, நம் நாளிதழில் வெளியான செய்தியால், சேத்துப்பட்டில் உயர் மின்னழுத்தம் ஏற்பட்ட பகுதியில், நேற்று புதிய 'டிரான்ஸ்பார்மர்' அமைத்ததால், வீடுகளில் மின் வினியோகம் சீரானது. சேத்துப்பட்டு, பிருந்தாவனம் பகுதியில் ஐந்து தெருக்களிலும், மங்களபுரத்தில் 12 தெருக்களிலும் நுாற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். இக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களாக, மின்வாரியத்தால் வினியோகிக்கப்படும் மின்சாரத்தில், உயர் மின் அழுத்த பிரச்னை ஏற்பட்டது.இதன் காரணமாக மின் மோட்டார்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்தினர், இக்குடியிருப்பில் உள்ள பழைய டிரான்ஸ்பார்மரை பரிசோதித்த போது, பழுதடைந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து நேற்று, பழைய டிரான்ஸ்பார்மரை அகற்றி, புதிய டிரான்ஸ்பார்மரை பொறுத்தினர்.பின், உயர் மின்னழுத்தம் ஏற்பட்ட வீடுகளிலும் சோதித்த போது, சரியான மின் வினியோகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ