கடையில் ரூ.1.42 லட்சம் திருடிய ஊழியர் கைது
ஆதம்பாக்கம்,:ஆதம்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில், 'சந்தோஷ் ஹைப்பர் மார்க்கெட்' உள்ளது. கடையின் இடதுபுற ஷட்டர் பூட்டு, நேற்று காலை உடைக்கப்பட்டு, கடையில் இருந்த 1.42 லட்சம் ரூபாய் திருடப்பட்டது.கடையின் உரிமையாளர் லட்சுமிகுமார், போலீசாருக்கு தகவல் அளித்தார்.விசாரணையில், அதே கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்க்கும் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா மாரிமுத்து தினேஷ், 27, என்பவர், ஷட்டர் பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.மொபைல் போன் சிக்னல் மூலமாக, அவர் பூந்தமல்லியில் பதுங்கியிருப்பது தெரிந்து, அங்கு விரைந்த போலீசார், அவரை கைது செய்தனர்.