உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை பி.எப்., அதிகாரிகள் விளக்கம்

வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை பி.எப்., அதிகாரிகள் விளக்கம்

சென்னை, 'முதல் முறையாக வேலையில் சேரும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பற்றிய விபரங்களுக்கு, பி.எப்., எனும் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்' என, பி.எப்., ஆணையர்கள் ரேணு ராமச்சந்திரன் - சென்னை; சிவகுமார் - அம்பத்துார்; ராகுல் குமார் - திருவள்ளூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.அவர்களின் அறிக்கை:மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்கவும், சமூக பாதுகாப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இதன்படி, முதன்முறையாக வேலையில் சேருவோருக்கு ஒரு மாத ஊதியம், அதிகபட்சமாக 15,000 ரூபாய், இரண்டு தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை ஆறு மாத வேலைக்கு பிறகும், இரண்டாவது தவணை, 12 மாத வேலைக்கு பிறகும் வழங்கப்படும்.கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் மாதம் 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வகையில், 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தால், 1.92 கோடி முதல் முறை ஊழியர்கள் பயன் பெறுவர். வரும் ஆகஸ்ட் 1 முதல் 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பொருந்தும். மேலும் விபரங்களுக்கு, மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !