உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பராமரிப்பில்லாத முத்துரங்கம் பூங்காவில் அதிகரிக்கும் காதலர்களின் அத்துமீறல்கள்

பராமரிப்பில்லாத முத்துரங்கம் பூங்காவில் அதிகரிக்கும் காதலர்களின் அத்துமீறல்கள்

தாம்பரம்: மேற்கு தாம்பரத்தில், காவல் நிலையத்தை ஒட்டி, முத்துரங்கம் பூங்கா உள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் பெரிய பூங்கா என்ற சிறப்பு பெற்றது.மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள், மார்க்கெட் வருவோர், இப்பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 2012ம் ஆண்டு, நீரூற்று, இயற்கை ஓவியம், விலங்குகளின் தத்ரூப சிலைகள், யோகா மையம், பூச்செடிகள், நடைபாதை, மின் விளக்கு, குடிநீர், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டன.அதன்பின், பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், இப்பூங்கா பராமரிப்பில் நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.அதனால், பூங்கா நாசமாகி விட்டது. நீரூற்று பழுதானது. யோகா மையம் பயனின்றி கிடக்கிறது. குடிநீர் தொட்டி கேட்பாரற்ற நிலையில் உள்ளது. மின் விளக்குகள் எரியவில்லை.கண்காணிப்பு கேமரா எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. செடி, கொடிகள் தண்ணீர் இன்றி காய்ந்து நாசமாகிவிட்டன.தற்போது, நடைபயிற்சி செல்வோருக்கு மட்டுமே இப்பூங்கா பயன்படுகிறது. மற்றொரு புறம், காதலர்கள் ஒதுங்கும் இடமாக, இப்பூங்கா மாறிவிட்டது.தினசரி, ஏராளமான காதலர்கள் அமர்ந்து, அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். நடைபயிற்சி செல்லும் முதியோர், காதலர்களின் அட்டகாசத்தை பார்த்து முகம் சுளிக்கின்றனர்.அருகே காவல் நிலையம் இருந்தும், இப்பூங்காவில் இதுபோன்ற செயல் நடப்பது, அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை இணைந்து, இப்பூங்காவை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை