உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்த ஆங்கில பேச்சு திறன் பயிற்சி துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களை மேம்படுத்த ஆங்கில பேச்சு திறன் பயிற்சி துவக்கம்

குரோம்பேட்டை, தாம்பரத்தில், மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்தும் விதமாக, அஸ்தினாபுரம் நகராட்சி பள்ளியில், ஆங்கிலே பேச்சு திறன் பயிற்சி, நேற்று துவங்கப்பட்டது. தாம்பரத்தில், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தவும், மாணவ - மாணவியரின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாணவர்களின் ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்தும் வகையில், ஆங்கில பேச்சு திறன் பயிற்சி, நேற்று துவங்கப்பட்டது. அஸ்தினாபுரம், நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி, கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர், இப்பயிற்சியை துவக்கி வைத்தனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். மாநகராட்சி சார்பில், தனியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டு, மாநகராட்சி பள்ளிகளில், வாரத்தில் இரண்டு நாட்களுக்கு, ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம், தனியார் பள்ளிகள் போல், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கில பேச்சு திறனில் சிறந்து விளங்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி