எபியோன் பெயின் மையம் மூன்றாம் ஆண்டு நிறைவு
சென்னை, சென்னையில் உள்ள 'எபியோன் பெயின் மேனேஜ்மென்ட்' மையம், மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடி உள்ளது.எழும்பூரில், எபியோன் பெயின் மேனேஜ்மென்ட் மையம் இயங்கி வருகிறது. இங்கு, அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன பிளாஸ்மா தெரபி மூலம், வலி நிவாரண மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.இந்த மையம், நோயாளிகளுக்கு தீராத மூட்டுவலி, முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முகத்தில் ஏற்படும் வலி, கை - கால் வலி போன்ற வலிகளுக்கு எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல், நிரந்தர தீர்வை வழங்கி வருகிறது.இதுகுறித்து, மையத்தின் முன்னணி நிபுணர் சேத்னா சேத்தன் கூறியதாவது:பொதுமக்களுக்கு வலிகளில் இருந்து நிவாரணம் மற்றும் சிகிச்சைகளை அளிக்கும் இச்சேவையில், மூன்று ஆண்டுகள் கடந்து வந்துள்ளோம் என்பது பெருமைக்குரிய நிகழ்வாகும்.அறுவை சிகிச்சைகளுக்கு மாற்றாக பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள். எங்களை நம்பி, தொடர்ந்து ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.