உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இ.பி.எஸ்., வழக்கு; தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை

இ.பி.எஸ்., வழக்கு; தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலாளராக இ.பி.எஸ்., அங்கீகரிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2022ம் ஆண்டு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cn3pw00q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனவே, இ.பி.எஸ்., பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி ஒரு சிலர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ்., தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.மேலும், இ.பி.எஸ்., மனுவுக்கு ஜன.,27ம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Laddoo
ஜன 09, 2025 16:57

எடப்பாடி ஏன் ரெட்டை இலையை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்? ரெட்டை இலைதான் வெற்றிக்கு காரண்டீ என்றால் ஏன் போன முறை வெற்றி பெறவில்லை? கோழி சின்னத்தை வைத்து ஜெயா வெற்றி பெறவில்லையா?


Laddoo
ஜன 09, 2025 16:53

பேரறிஞர் என்று ஒருவரை ஓவராக புகழ்ந்தார்கள். அவருடைய தகிடு தந்தங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன வெளியிட்டவர் எம் எஸ் உதயமூர்த்தி


RAVINDRAN.G
ஜன 09, 2025 15:21

அதிமுக எடப்பாடியார் பக்கமே இருந்தாலும் இனிமேல் பழைய அதிமுகவாய் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். மக்கள் இரு திராவிட கட்சி ஆட்சியையும் பார்த்துவிட்டார்கள். வேறு ஒரு நல்ல கட்சிக்கு அதாவது இருப்பதிலேயே பரவாயில்லை வாய்ப்பு தந்தால் நல்ல முடிவா இருக்கும்


S.L.Narasimman
ஜன 09, 2025 12:32

ஏற்கனவே கட்சி இரெட்டை இலை சின்னம், பொதுசெயலாளர் எடைப்பாடியார் என்று தேர்தல் ஆணையம், கோர்ட் அங்கிகரித்து பொதுத்தேர்தல்கள் முடிந்த பின்பு மீண்டும் அதில் சர்ச்சையைகிளப்புவது அரசியல் குறுக்கீடு, அயோக்கியதனம். இன்றும் பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடியார் பக்கம் இருப்பதுதான் நிதர்சனம்.


Kanns
ஜன 09, 2025 12:22

Stay by said Judge is Highly Biased Given that Everybody Knows that JJ was Termed Permanent GS by ADMK& that EPS got SelfAppointed as GS by UnFair& Forced ADMK Body


Kadaparai Mani
ஜன 09, 2025 13:13

99 percent of AIADMk is with EPS. Office bearers and cadres are with EPS . All the court judgements are in favour of EPS. Court has followed the due process of law.


Sundar R
ஜன 09, 2025 12:13

கல்யாணம் பண்ணினால் தான் பைத்தியம் தெளியும்.


கல்யாணராமன்
ஜன 09, 2025 11:56

சின்னம் குறித்து முடிவெடுத்து அறிவிக்க சொல்லி உச்ச நீதிமன்றம் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு போட்டுள்ளது. அது இறுதி கட்டத்தில் இருக்கும்போது இப்படி ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மூலம் குழப்பம் உண்டு பண்ண நினைக்கிறார் எடப்பாடி.


Kadaparai Mani
ஜன 09, 2025 13:19

First the admission of initial petition by a rank outsider and known dmk supporter is very much wrong. If it is allowed all the political party symbols will be frozen. Read the various judgements given in Maharashtra for Mr.Shinde and powar.


GMM
ஜன 09, 2025 11:55

தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்பிற்கு நீதிமன்றம் போன்ற மற்றோரு இணையான அரசியல் சாசனம் அமைப்பு உத்தரவு, கட்டளை பிறப்பிக்க முடியுமா. ?


சமீபத்திய செய்தி