உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தப்பிய விசாரணை கைதி சிக்கினார்

 தப்பிய விசாரணை கைதி சிக்கினார்

நீலாங்கரை: நீலாங்கரை காவல் நிலையத்தில், ஆய்வாளர் அறை கழிப்பறை வழியாக தப்பிய விசாரணை கைதியை, போலீசார் நேற்று கைது செய்தனர். ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த ஆல்ரின் என்பவர் வீட்டில் பணம் திருடிய, விஷால், 20, என்பவரை, நீலாங்கரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, கழிப்பறை செல்ல வேண்டும் எனக்கூறி, ஆய்வாளர் அறையில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தினார். நீண்ட நேரமாகியும் விஷால் வெளியே வராததால், போலீசார் கதவை உடைத்தனர். கழிப்பறை ஜன்னலில் கம்பி இல்லாததால், அதில் இருந்த கண்ணாடியை கழற்றி அதன் வழியாக, விஷால் தப்பி சென்றது தெரிந்தது. கண்ணகி நகரில் நண்பர்களுடன் மது அருந்திய விஷாலை, நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !