உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இயந்திரம் வாயிலாக டிக்கெட் கிளாம்பாக்கத்தில் வசதி

இயந்திரம் வாயிலாக டிக்கெட் கிளாம்பாக்கத்தில் வசதி

சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், சுயசேவை இயந்திரம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில், அரசு விரைவுப் போக்குவரத்து நிர்வாக இயக்குநர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த புதிய இயந்திரம் வாயிலாக, பயணியர் எந்த நேரத்திலும் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கான பேருந்துகளுக்கு, முன்பதிவு செய்து கொள்ளலாம், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.மின்னணு முறையில் கியூ.ஆர்., குறியீடு, கிரெடிட், டெபிட் கார்டுகள் வாயிலாக டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இந்த இயந்திரத்திலேயே தேவையான பேருந்து வகை, புறப்படும் நேரம், இருக்கை எண் போன்றவற்றை விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம். 'முதல் கட்டமாக, கிளாம்பாக்கத்தில் இந்த புதிய இயந்திரம் துவங்கப்பட்டுள்ளது. பயணியரின் வரவேற்பை பொறுத்து, அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி