உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலி மருத்துவர் அம்பத்துாரில் கைது

போலி மருத்துவர் அம்பத்துாரில் கைது

அம்பத்துார், சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் குகநாதன், 42. இவர், முறையாக மருத்துவம் பயிலாமல், அம்பத்துார் அருகே சூரப்பட்டு, பாரதிதாசன் நகரில் 'பாலாஜி கிளினிக்' என்ற பெயரில் பொதுமக்களுக்கு, சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்கம் இணை இயக்குனர் இளங்கோவன் நேரில் ஆய்வு செய்தார். இதில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், குகநாதன் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வருவது தெரியவந்தது.முறையாக மருத்துவ படிப்பை முடிக்காமல், போலியாக மற்றொரு மருத்துவரின் பதிவு எண்ணை பயன்படுத்தி மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. இது குறித்து அம்பத்துார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் குகநாதனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி