உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிந்தாதிரிப்பேட்டையில் போலி ஐபோன் வேட்டை

சிந்தாதிரிப்பேட்டையில் போலி ஐபோன் வேட்டை

சென்னை, அக். 20-சென்னை, சூளைமேடு, சங்கரியார் காலனி மூன்றாவது தெருவில் உள்ள லட்சுமி கிருபா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் குமரவேல், 49. இவர், கிரிபின் இன்டலக்சுவல் பிராப்பர்டி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது நிறுவனத்திற்கு, ஐபோன், ஏர்பாட்ஸ், சார்ஜர் உள்ளிட்ட மின் உபகரணங்களை போலியாக தயாரித்து விற்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகளை கண்டறிந்து, அவற்றின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, ஆப்பிள் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில், சென்னை ரிச்சி தெருவில், ஆப்பிள் நிறுவன ஐபோன் உள்ளிட்ட உபகரணங்களை போலியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக, குமரவேலுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து அவரது குழு, ரிச்சி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டது. அங்குள்ள ராஜ் மொபைல் கடை, அம்பிகா மொபைல் கடை, ராய் போ கடை, இமாலயா மார்க்கெட்டிங் கடை ஆகிய நான்கு கடைகளில், போலி ஐபோன் மற்றும் உபகரணங்கள் விற்பதை கண்டறிந்தது.இது குறித்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நான்கு கடைகளிலும், அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், ஆப்பிள் நிறுவன ஐபோன், அதன் லோகோ மற்றும் பெயர் பயன்படுத்தப்பட்ட ஏர்பாட்ஸ், சார்ஜர், வாட்ச் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.மேலும், போலி உபகரணங்களை விற்பனை செய்த லட்சுமன்குமார், 27, உம்மேத், 28, கிஷோர், 22, ரவிதர், 35, அஜூன், 22, இந்தர் சிங், 22, ஆகிய ஆறு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.மேலும், தலைமறைவாக உள்ள விற்பனையாளர்களான, ஹாரிசிங், ரமேஷ் பூரி, ராஜ்குமார் ஆகிய மூவரை தேடுகின்றனர்.

இரண்டாம் ரகத்தில் நல்ல லாபம்

போலி உபகரணங்கள் விற்கப்படுவது குறித்து, ரிச்சி தெருவில் கடை நடத்தும் பெயர் குறிப்பிடாத வியாபாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் எங்குமே கிடைக்காத மின்னணு சாதனப் பொருட்கள்கூட, ரிச்சி தெருவில் கிடைக்கும். இங்கு விற்கப்படும் மொபைல் சார்ந்த பொருட்கள் மட்டுமின்றி, பல்வேறு மின்னணு சாதனங்கள், சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.இங்கு விற்கப்படும் பொருட்கள் அனைத்தும், இரண்டாவது ரகம்தான் என்பது, அனைவருக்கும் தெரியும். மிகவும் வசதி படைத்தவர்கள் யாரும், இங்கே வந்து பொருட்களை வாங்குவதில்லை. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வந்து வாங்குகின்றனர். இரண்டாம் ரகமாக இருந்தாலும், ஐபோன், அதன் உபகரணங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பொருள் விற்றால், 1,000 ரூபாய்க்கு, 200 ரூபாய் கிடைக்கிறது. நல்ல விலை கிடைப்பதால், தொடர்ந்து விற்று வருகிறோம். சீனாவில் இருந்து பிரபலமான நிறுவன தயாரிப்பிலேயே வருகின்றன. அவற்றை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுப்பதில்லை. அதனால், எங்கள் கைகளுக்கு வந்து, கடைகளில் விற்கிறோம். ஆனால் விழாக்காலங்களில் மட்டுமே, இவ்வாறான சோதனைகள் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை