உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குடும்பம்

அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குடும்பம்

கொடுங்கையூர், கொடுங்கையூர், நாராயணசாமி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 49; அ.தி.மு.க., 34வது வட்ட செயலர். இவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு நேற்று, சின்னாண்டி மடம், டி.எச்., சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை சுத்தம் செய்து, வண்ணம் பூசிக் கொண்டிருந்தார்.அங்கு வந்த, அக்கட்சியின் முன்னாள் வட்ட செயலர் கனகராஜ், அவரது மகன் பிரபு, மகள்கள் பிரியங்கா, கல்பனா மற்றும் உறவினர் சதீஷ் ஆகியோர், 'எம்.ஜி.ஆர்., சிலையை சுத்தம் செய்ய நீ யார்' என கேட்டு, தகாத வார்த்தைகள் பேசி, கிரிக்கெட் மட்டையால் வெங்கடேசனை தாக்கினர்.படுகாயமடைந்த வெங்கடேசன், கொடுங்கையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை