மேலும் செய்திகள்
மூன்று ரவுடிகள் கைது
10-May-2025
புரசைவாக்கம்:புரசைவாக்கம், திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி, 48; காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்றபோது, அவரது வீட்டின் வாசலில், சிலர் குடித்து விட்டு நின்றிருந்தனர்.அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு, சக்தி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், சக்தியின் வீட்டிற்குள் சென்று, அங்கிருந்த 'டிவி'யை அடித்து உடைத்துள்ளனர். இது குறித்து, சக்தி, தலைமை செயலக குடியிருப்பு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற முயல்காது அப்பு, 24, அவரது தந்தை ரமேஷ், 48, சதீஷ்குமார், 20, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.
10-May-2025