சிமென்ட் காரை உதிரும் ரேஷன் கடையால் அச்சம்
திருவொற்றியூர், திருவொற்றியூர், ஏழாவது வார்டு பாலகிருஷ்ணா நகரில், கூட்டுறவு துறையின் கிராம தெரு - 3 என்ற நியாயவிலைக் கடை செயல்படுகிறது.இங்கு, 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ளனர். திருவொற்றியூரின் பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.அதிலும், இந்த பாலகிருஷ்ணா நகரில் இயங்கி வரும் நியாயவிலை கடை, பாழடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது.சிமென்ட் காரைகள் உதிர்ந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால், ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர் அச்சத்தில் உள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் கவனித்து, வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக, அபாயகரமான கட்டடத்தில் இயங்கி வரும், நியாயவிலைக் கடைகளை பாதுகாப்பான கட்டடங்களுக்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.