உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தண்டையார்பேட்டையில் மருத்துவ கழிவால் அச்சம்

தண்டையார்பேட்டையில் மருத்துவ கழிவால் அச்சம்

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையில், சாலையோரம் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குப்பை சேகரிப்பு பணி தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து, வடசென்னை முழுதும் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட, தண்டையார்பேட்டை, நேரு நகர் - நேதாஜி நகர் சந்திப்பு மற்றும் நேதாஜி நகர் ஆறாவது தெருவில், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை, சமூக விரோதிகள் மூட்டையாக கட்டி போட்டு செல்கின்றனர். சில தினங்களாக, இந்த இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், கிருமி தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து அறிந்த சுகாதார துறை அதிகாரிகள், 'மருத்துவ கழிவுகள் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி