உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லஞ்ச பணத்துடன் சிக்கிய மின்வாரிய பெண் அதிகாரி

லஞ்ச பணத்துடன் சிக்கிய மின்வாரிய பெண் அதிகாரி

சென்னை,போரூர் மின் பகிர்மான அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று மாலை, 4:30 மணியளவில், திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த அலுவலகத்தின் ஊரகப்பகுதி உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வி அறைகளிலும் சோதனை நடந்தது. அவரின் காரில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி விளக்கம் கேட்டபோது, தமிழ்ச்செல்வி எந்த பதிலையும் தெரிவிக்காததால், லஞ்சமாக வாங்கிய பணம் என, போலீசார் முடிவுக்கு வந்தனர். அதேபோல, மின்வாரிய ஊழியர்கள் ராஜ், மோகனரங்கன் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத, 29,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம், 1.29 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மூவரிடமும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை