45 வயதுக்கு மேலான பெண் போலீசாருக்கு இரவு பணியில் விலக்கு
சென்னை,சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து, கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகர காவல் துறையில், பல்வேறு நிலைகளில், 7,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் இரவு பணி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பெண்களில் 45 வயதுக்கு மேற்பட்ட தலைமைக் காவலர்கள், எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு, இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து, போலீஸ் கமிஷனர் அருண், நேற்று உத்தரவிட்டார்.