உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிதி நிறுவனம் மோசடி நாளை மனு மேளா

நிதி நிறுவனம் மோசடி நாளை மனு மேளா

சென்னை, புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில், 'புரசைவாக்கம் சந்தத சங்க நிதி லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, 53 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது.இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவரை கைது செய்துள்ளனர். மோசடி தொடர்பாக, 758 பேர் புகார் அளித்துள்ளனர்.இந்நிறுவனத்ததலக பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க, வில்லிவாக்கம், அகத்தியர் நகர், ஸ்ரீ மினி காமகோடி திருமண மண்டபத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு மனு மேளா நடக்கிறது.இந்த இடத்திற்கு செல்ல, நாதமுனி திரையரங்கம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். விபரங்களுக்கு, 9498102518, 9498129862 ஆகிய மொபைல் எண்களை அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை