மேலும் செய்திகள்
கானாடுகாத்தானில் வெளிநாட்டு மாணவர்கள்
07-Aug-2025
சென்னை :வெளிநாட்டிற்கு வேலை சென்ற அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் உயிரிந்தால் நிதியுதவி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைக்கு சென்ற அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் திடீரென உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும். உறுப்பினர் உயிரிழந்த ஒன்பது மாத காலத்திற்குள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.தகுதியின் அடிப்படையின் உதவித்தொகை வழங்கப்படும். உயிரிழந்தோர், அயலக் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். முறையாக ஆவணங்களுடன் பணியில் இருக்க வேண்டும். அயல் நாட்டு இறப்பு சான்று வேண்டும் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
07-Aug-2025