உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருத்துவமனையில் தீ விபத்து மின்சாதன பொருட்கள் சேதம்

மருத்துவமனையில் தீ விபத்து மின்சாதன பொருட்கள் சேதம்

திருமங்கலம், 'பி வெல்' மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், மின்சாதன பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.திருமங்கலம் பகுதியில், 'பீ வெல்' என்ற பெயரில் தனியார் மருத்தமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் நேற்று அதிகாலை, 1:30 மணியளவில், முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது; திடீரென தீப்பிடிக்க துவங்கியது. அண்ணா நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். அறையில் ஊழியர்கள் யாரும் இல்லை என்பதால், யாருக்கும் பாதிப்பு இல்லை. அதேநேரம், அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, மின்விசிறி மற்றும் படுக்கை கதவு உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. தீவிபத்து குறித்து, திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை