மேலும் செய்திகள்
நாமக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் பேச்சு போட்டி
31-Oct-2025
கானத்துார்: கானத்துாரில் உள்ள மாயாஜால் பொழுதுபோக்கு மையத்தில், திடீரென தீ விபத்து நடந்தது. இ.சி.ஆர்., கானத்துாரில் மாயாஜால் என்ற பொழுதுபோக்கு மையம் உள்ளது. நேற்று, அங்குள்ள கிடங்கில் திடீரென தீ பிடித்தது. அருகில், ராட்டினத்தில் சுற்றிக்கொ ண்டிருந்த பள்ளி மாணவ - மாணவியர் உடனே வெளியேற்றப்பட்டனர். கோவளம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக, கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Oct-2025