உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டாசு பொறி விழுந்து குடிசை எரிந்து நாசம்

பட்டாசு பொறி விழுந்து குடிசை எரிந்து நாசம்

அம்பத்துார்: சுபநிகழ்ச்சிக்கு பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பட்டு, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த குடிசை எரிந்து நாசமானது. அம்பத்துார், அத்திப்பட்டு, பஜனை கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில், வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள், குடிசை கட்டி வசித்து வந்தனர். இன்று (நவ.,29) இரவு 9:30 மணியளவில் அப்பகுதியில் சுபநிகழ்ச்சியில் வாண வேடிக்கை பட்டாசுகள் வெடித்தபோது, அதன் தீப்பொறி குடிசையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. குடிசையில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். மளமளவென பரவிய தீயால், குடிசை முழுதும் எரிந்து நாசமானது. மேலும், வீட்டில் இருந்த சிலிண்டர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சாலையில் விழுந்தது. அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ