உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முத்து மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி திருவிழா கோலாகலம்

முத்து மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி திருவிழா கோலாகலம்

வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, சிங்காரத் தோட்டத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில், துர்க்கை, ஐந்து முக விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை முருகர், காவல் தெய்வங்களாக பைரவர், கருப்பசாமி, நவகிரகங்களோடு முத்து மாரியம்மன் அருள் பாலிக்கிறார்.இங்கு ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், 47ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா, மார்ச் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, மார்ச் 21ம் தேதி, திருவிளக்கு பூஜையும்; மார்ச் 25ம் தேதி பொங்கல் திருவிழா நடந்தது.முக்கிய நிகழ்வான அக்னி சட்டி திருவிழா, நேற்று நடந்தது. இதில், பக்தர்கள் கடுமையான விரதம் கடைபிடித்து அக்னி சட்டியை ஏந்தியபடி ஊர்வலமாய் வந்தனர்.கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். தேர் திருவிழா இன்று நடக்கிறது. பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை