மேலும் செய்திகள்
சென்னையில் களைகட்டிய மீன்வள திருவிழா
29-May-2025
சென்னை:நந்தனம், பேன்பேட்டையில், மீன்வளத்துறை, கால்நடைத்துறை, கணக்கு கருவூலத்துறை உள்ளிட்ட ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.அங்கு வரும் மக்களுக்காக, மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் வாயிலாக, தரமான மீன் உணவுகள் கிடைக்கும் வகையில், மீன் வடிவில் விற்பனை நிலையம் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சோதனை முயற்சியாக மீன் விற்பனை நிலையம் அமைக்கப்படுகிறது. ஒரு வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும். இதில், கடல் உணவு வகைகள் விற்கப்படும். உணவு விலை விரைவில் நிர்ணயம் செய்யப்படும்.தரமான, விலை குறைந்த கடல் உணவுகளை, மக்கள் ருசியாக சாப்பிட்டு பயன் பெறலாம். கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற அரசு அலுவலகங்கள், மக்கள் கூடும் இடங்களில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு கூறினர்.
29-May-2025