மேலும் செய்திகள்
காசிமேடில் மீன் வரத்து 'டல்'
09-Sep-2024
ஆவணி க டைசி ஞாயி றில் மீன் பிரியர்கள் ஏமாற்றம்
16-Sep-2024
Senior Livingக்கு சொர்க்கம் | Lancorல் அமைதியான வாழ்க்கை
14-Sep-2024 | 1
காசிமேடு:காசிமேடு துறைமுகத்தில் நேற்று, 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. கிளிச்ச, வாளை, சங்கரா, கானாங்கத்த, வரி பாறை உள்ளிட்ட மீன்களின் வரத்து இருந்தது. சிறிய மீன்களின் விலை சற்று குறைந்திருந்தது. அதேநேரம் பெரிய மீன்வகைகளின் வரத்து, கடந்த வாரங்களை போலவே குறைவாக காணப்பட்டது. முறையே கிலோ வஞ்சிரம் 800 - 1,200; வெள்ளை வவ்வால் 900 - 1,000; சங்கரா 150 - 300; சீலா 350 - 400 ரூபாய்க்கு மீன்கள் விற்கப்பட்டன. விலையில் பெரிய அளவில் மாற்றம் வரவில்லை. புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் விரதம் கடைப்பிடிப்பதால், விலை குறையும் என, வந்த மீன் பிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேநேரம், மக்கள் கூட்டமும் அலைமோதியதால் வியாபாரம் களைகட்டியது.மீன் விலை நிலவரம்மீன் வகை கிலோ (ரூ.)வஞ்சிரம் 800 - 1,200வெள்ளை வவ்வால் 900 - 1,000கறுப்பு வவ்வால் 600 -- 700சங்கரா 150 - 300சீலா 350 - 400நெத்திலி 200கானாங்கத்த 150 - 200கடம்பா 150 -- 200நண்டு 200 - 400இறால் 300 - 500
09-Sep-2024
16-Sep-2024
14-Sep-2024 | 1