மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை
காசிமேடு: தமிழகத்தில், 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம், ஏப்., 14ம் தேதி நள்ளிரவு முடிந்தது.அன்றயை தினம், மோசமான வானிலை காரணமாக, யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை சார்பில், எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால், தடையை மீறி 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அந்த விசைப்படகுகளுக்கு மட்டும், டீசல் மானியம் நிறுத்தப்பட்டது.இதனால், பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மீனவர்கள், நேற்று காலை, காசிமேடு - மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மானிய டீசல் வழங்க கோரி வாக்குவாதம் செய்தனர்.தொடர்ந்து, விசைப்படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.