உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கடலில் தத்தளித்த வாலிபரை மீட்ட மீனவர்கள்

 கடலில் தத்தளித்த வாலிபரை மீட்ட மீனவர்கள்

சென்னை: நீலாங்கரை பகுதியில், கடலில் உயிருக்கு போராடிய வாலிபரை, மீனவர்கள் நீந்தி சென்று காப்பாற்றினார். சென்னை, நீலாங்கரை பகுதியில், கடலில் 1 கி.மீ., துாரத்தில், நேற்று ஒரு வாலிபர் உயிருக்கு போராடி கொண்டு, 'காப்பாற்றுங்கள்' என கை அசைத்து கொண்டிருந்தார். கரையில் நின்ற ஒரு காதல் ஜோடி இதை பார்த்து, வாலிபரை காப்பாற்றுங்கள் எனக் கூக்குரல் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு, நேசமுத்து, சஞ்சய் ஆகிய மீனவர்கள், கடலில் நீந்தி சென்று அந்த வாலிபரை மீட்டு கரையில் சேர்த்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நீலாங்கரை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்வந்த், 26, என தெரிந்தது. மயக்கம் தெளிந்த பின் மற்ற விபரங்கள் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ