உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநங்கை காதலியிடம் அத்துமீறிய நண்பன் சிக்காததால் தந்தைக்கு வெட்டு காதலன் உட்பட ஐவர் கைது

திருநங்கை காதலியிடம் அத்துமீறிய நண்பன் சிக்காததால் தந்தைக்கு வெட்டு காதலன் உட்பட ஐவர் கைது

ஓட்டேரி: ஓட்டேரி அருகே, எஸ்.வி.எம்., நகரில் வசிப்பவர் பிரசாந்த், 24. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்ற கீதா, 22, என்ற திருநங்கையும் காதலர்கள். தனியே வீடு எடுத்து, இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். பிரசாந்த், ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது நண்பர் கார்த்திக் என்பவர், கீதாவுக்கு பாதுகாப்பாக இருந்துள்ளார். அப்போது கீதாவிடம், தகாதமுறையில் கார்த்திக் நடந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த பிரசாந்த், தன் நண்பர்கள் ஏழு பேருடன், கார்த்திக் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு கார்த்திக் இல்லாத நிலையில், அவரது தந்தையை, பிரசாந்த் தரப்பினர் கத்தியால் வெட்டி தப்பினர். இதுகுறித்து புகாரையடுத்து, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரசாந்த், புவன், 18, அறிவு, 28, மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேரை, நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில் பிரசாந்த், புவன் ஆகியோர், போலீசார் கைது செய்யும்போது தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்ததில், இருவரது வலது கை எலும்பு முறிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !