உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சி.ஐ.டி., நகரில் ரூ.2 கோடியில்  ஐந்து மாடி வாகன நிறுத்தம்

சி.ஐ.டி., நகரில் ரூ.2 கோடியில்  ஐந்து மாடி வாகன நிறுத்தம்

சென்னை, சென்னை சி.ஐ.டி., நகரில், இரண்டு கோடி ரூபாயில், 5 தளங்கள் கொண்ட வாகன நிறுத்தம் கட்ட, வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை - தி.நகர் இடையே சி.ஐ.டி., நகரில், வீட்டுவசதி வாரிய பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, இரண்டு அடித்தளம், தரைதளத்துடன், ஏழு மாடி கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், வாகனம் நிறுத்துவதற்கு கூடுதல் ஏற்பாடுகளை செய்ய, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. இதன்படி, இந்த வளாகத்தில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன், ஐந்து நிலை கொண்டதாக புதிய வாகன நிறுத்தம், இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. இங்கு, 'பசுல் மெக்கானிக்கல்' எனப்படும், ஹைட்ராலிக் முறையில் கார்களை மேல் தளங்களில் தானாக எடுத்து சென்று, உரிய இடங்களில் நிறுத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது. கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளோம் என, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !