மேலும் செய்திகள்
விமானத்தில் திடீர் கோளாறு ஓடுபாதையில் நிறுத்தம்
22-Dec-2024
சென்னை, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் 'இண்டிகோ' விமானம், நேற்று காலை 8:40 மணிக்கு புறப்பட்டது. இதில், 110 பேர் இருந்தனர். விமானம் வானில் பறக்கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த விமானி, விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தகவல் தந்தார்.உடனடியாக தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 9:00 மணிக்கு பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் குழு விரைந்து, கோளாறை சரி செய்யும் பணியில் இறங்கினர். ஆனால், பழுது பார்ப்பதற்கு நேரம் அதிகம் எடுத்துக் கொள்வதால் பயணம் ரத்து செய்யப்பட்டது. பின், மாற்று விமானத்தில் பயணியர் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
22-Dec-2024