உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநிலத்தில் முதன்முறையாக செங்கல்பட்டில் சிறார் சிறப்பு இல்லத்தில் போதை மீட்பு மையம்

மாநிலத்தில் முதன்முறையாக செங்கல்பட்டில் சிறார் சிறப்பு இல்லத்தில் போதை மீட்பு மையம்

செங்கல்பட்டு, மாநிலத்திலேயே முதல் முறையாக, செங்கல்பட்டு அரசு சிறார் சிறப்பு இல்லத்தில் போதை மீட்பு மையம் அமைய உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரிக்கு அருகில், அர சின் சிறார் சிறப்பு இல்லம் செயல்படுகிறது. கடந்த 2022ல், திரு ட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட, தாம்பர த்தைச் சேர்ந்த 17 வயது சிறுவ ன் இந்த இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். அதே ஆண்டு டிச., 31ம் தேதி, சிறப்பு இல்லத்தி ன் ஊழியர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மாவட்ட கலெக்டர், சமூக நலத்துறை மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணையில், சிறுவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த து தெரிய வந்தது. அவர்கள், போதை மீட்பு மையம் மற்றும் கூடுதல் கட்டட வசதிகள் செய்து தர வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, தமிழகத்தில் முதல் முறையாக செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் , கண்காணிப்பாளர் அலுவலகம், உதவி கண்காணிப்பாளர் குடியிருப்புகள், கூடுதல் தங்குமிடம், போதை மீட்பு மைய கட்டடம் உள்ளிட்டவை கட்ட, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நிர்வாக அனுமதி வழங்கி, 5.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் கட்டுமானப் பணிகள் துவங்கின. 'இப்பணிகள் அனைத்தும், எட்டு மாதங்களில் முடிக்கப்படும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். Advertisementhttps://www.youtube.com/embed/fWWb5XBQdUcதமிழகம் முழுதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படும் சிறுவர்களுக்கு, போதைப் பழக்கம் இருப்பது கண்டறியப்பட்டால், செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் அமைக்கப்படும் போதை மீட்டு மையத்தில் சேர்க்கப்படுவர். இந்த மையத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளித்து, மூன்று மாதங்கள் கழித்து, சிறப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !