உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்டலுார் உயிரியல் பூங்காவில் வனக்காவலர் உடல் தகுதி தேர்வு

வண்டலுார் உயிரியல் பூங்காவில் வனக்காவலர் உடல் தகுதி தேர்வு

தாம்பரம், தமிழக வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது.இந்த பணிகளுக்கு, 10,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். 2024, ஜூன் 9ல் இணையவழியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 2,700 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, இரண்டு கட்டமாக, வண்டலுார் உயிரியல் பூங்காவில் உடல் தகுதித் தேர்வு, ஏப்., 22ல் துவங்கியது.இதில், சான்றிதழ் சரிபார்த்தல், மார்பளவு சரிபார்த்தல், பொறுமை சோதனை தேர்வு உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன.ஒவ்வொரு நாளும், 900 பேர் பங்கேற்றனர். கடைசி நாளான இன்றும், உடல்தகுதித் தேர்வு நடக்கிறது. இறுதியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ