உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரேஷன் கடைகளுக்கு அடிக்கல்

ரேஷன் கடைகளுக்கு அடிக்கல்

ஆர்.கே.நகர், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி, 47 வது வார்டுக்குட்பட்ட, ஜெ.ஜெ.நகரில், நியாய விலைக்கடை இல்லாததால், அப்பகுதி மக்கள் 2 கி.மீ., துாரம் நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து, ஜெ.ஜெ.நகரிலேயே நியாய விலைக்கடை அமைத்துத்தர அப்பகுதியினர், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதை ஏற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 15 லட்ச ரூபாய் செலவில், நியாய விலைக்கடை அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., எபினேசர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலர் ஜெபதாஸ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதி, 41வது வார்டுக்குட்பட்ட, பெரியார் நகர், கோவிந்தசாமி நகர் மக்களின் கோரிக்கையேற்று, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து 23 லட்ச ரூபாய் செலவில், இரண்டு நியாய விலைக்கடை மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பயிற்சி மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., எபினேசர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலர் ஜெபதாஸ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை