உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆன்லைன் வர்த்தகத்தில் பணமிழப்பால் ஆத்திரம் தம்பதியை கடத்தி சித்ரவதை செய்த 4 பேர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தில் பணமிழப்பால் ஆத்திரம் தம்பதியை கடத்தி சித்ரவதை செய்த 4 பேர் கைது

தண்டையார்பேட்டை, ஆன்லைன் வர்த்தகத்தில் பணமிழந்த ஆத்திரத்தில், வாலிபரையும், அவரது மனைவியையும் கடத்தி, விடுதில் அடைத்து சித்ரவதை செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, துறையூரைச் சேர்ந்த பிரபு, 37. இவர் தனது மனைவி சரண்யாவுடன், தண்டையார்பேட்டை, புது வைத்தியநாதன் தெருவில் உள்ள தன் நண்பர் ஹரி வீட்டில், 10 நாட்களாக தங்கியுள்ளார். இந்நிலையில், 18 ம் தேதி, பெங்களூரைச் சேர்ந்த உதயகுமார், சசிகுமார் உட்பட நான்கு பேர், ஹரியின் வீ்ட்டிற்கு வந்து, அங்கு தங்கியிருந்த பிரபுவை மிரட்டி, மனைவி சரண்யாவுடன் காரில் கடத்திச் சென்றுள்ளனர். கிண்டியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அடைத்து வைத்து, பிரபுவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து, சரண்யா தன் உறவினர் வாயிலாக, போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை தனிப்படை போலீசார், பிரபு மற்றும் அவரது மனைவியை மீட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட, பெங்களூரைச் சேர்ந்த உதயகுமார், 26, அவரது சகோதரர் சசிகுமார், 25, ஜெகதீஸ், 27, பெரம்பூரைச் சேர்ந்த லோகேஸ்வரன், 28, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.பெங்களுரூவில் நான்கு ஆண்டுகளாக, பிரபு ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்துள்ளார். இதில், உதயகுமார், சசிகுமார் ஆகியோரை, பார்ட்னராக சேர்த்துள்ளார். இதில், 40 லட்ச ரூபாய் வரை, இருவரும் முதலீடு செய்ததாக தெரிகிறது. தொழிலில் நட்டம் ஏற்படவே, பணத்தை திருப்பி கொடுக்க முடியாத பிரபு, சென்னை வந்து தன் நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். இவர், சென்னையில் இருப்பதை அறிந்துக் கொண்ட உதயகுமார் - சசிகுமார், தன் நண்பர்களுடன் சேர்ந்து வந்து, வாலிபரை கடத்திச் சென்று தாக்கி, பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கைதான நான்கு பேரையும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை