உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பர்னிச்சர் கடைக்காரரை கத்தியால் வெட்டிய நான்கு பேர் கைது

பர்னிச்சர் கடைக்காரரை கத்தியால் வெட்டிய நான்கு பேர் கைது

கொடுங்கையூர்:பர்னிச்சர் கடைக்காரரை கத்தியால் வெட்டிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பழைய வண்ணாரப்பேட்டை, தட்டாங்குளத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 33. கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்., நகர், 6வது தெருவில், பர்னிச்சர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தன் கடையில் வேலை பார்க்கும் மணி என்பவருடன், டூ - வீலரில் சென்றார். எம்.ஜி.ஆர்., நகர், 4 வது தெரு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நான்கு பேர், டூ - வீலரை மறித்து, சீனிவாசனின் மொபைல் போனை கேட்டு தாக்கினர். பயந்துபோன மணி, அங்கிருந்து ஓடி விட்டார். பின், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சீனிவாசனின் தலை மற்றும் வலது முழங்கையில் வெட்டி விட்டு, நான்கு பேரும் தப்பினர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சீனிவாசனுக்கு, 16 தையல் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, கொடுங்கயைூரை சேர்ந்த ராஜேஷ், 20, சக்திவேல், 25, எழில் நகரைச் சேர்ந்த அரவிந்தன், 25, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மணி, 21, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை