மேலும் செய்திகள்
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு விற்ற ஐவர் கைது
09-Apr-2025
பிடிஆர் புலம்பிய காரணம்! - வெங்கடேசன்
22-Apr-2025
கொருக்குப்பேட்டை, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கிருஷ்ணப்ப கார்டன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 54. கடந்த ஏப்., 20ம் தேதி மாலை அவரது மகனுடன் வீட்டிலிருந்தபோது, மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்து, வெங்கடேசனையும், அவரது மகனையும் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் வீட்டில் வைத்திருந்த, 70 ஆயிரம் ரூபாய், பர்ஸ் மற்றும் வாட்சை பறித்து சென்றனர். அப்போது தடுக்க வந்த வெங்கடேசனின் மனைவியை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி தப்பினர்.இதுகுறித்த புகாரின்படி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கொருக்குப்பேட்டை, பெருமாள் கோவில் 1வது தெருவை சேர்ந்த சந்தோஷ், 24; பழைய வண்ணாரப்பேட்டை, வெங்கடகிருஷ்ணன் தெருவை சேர்ந்த மணிகண்டன், 29; கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் 1வது தெருவை சேர்ந்த முருகன், 26, நீலாங்கரை, முத்துமாரியம்மன் கோவில் 3வது தெருவை சேர்ந்த ரஞ்சித், 25 ஆகிய நால்வரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 20,000 ரூபாய் மணி பர்ஸ், வாட்ச் மற்றும் 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. கைதான நால்வரும் கொருக்குப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.
09-Apr-2025
22-Apr-2025