உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழையால் நான்காம் டிவிஷன் கால்பந்து போட்டி நிறுத்தம்

மழையால் நான்காம் டிவிஷன் கால்பந்து போட்டி நிறுத்தம்

சென்னை, சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கால்பந்து போட்டி சென்னை பேசின் பிரிட்ஜ், டான் பாஸ்கோ மைதானத்தில் நடந்து வருகிறது.இதில், சென்னை மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் லீக் முறையில் நடந்து வருகிறது.நேற்று நடக்க இருந்த போட்டிகள் மழையால் நிறுத்தப்பட்டது. மைதானத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், இன்றைய போட்டியும் தள்ளிவைக்கப்படலாம்; போட்டிகள் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என, கால்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ