உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவிலம்பாக்கம் தீ விபத்தில் சிக்கிய நான்காவது நபரும் பலி

கோவிலம்பாக்கம் தீ விபத்தில் சிக்கிய நான்காவது நபரும் பலி

கோவிலம்பாக்கம்,: கோவிலம்பாக்கம், காந்தி நகர் 15வது தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி, 75. இவரது மனைவி ராணி, 70, மகள் சாந்தி, 45, மருமகன் ரகு, 48, பேரன் அஜித்குமார், 27, ஆகியோர், ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.கடந்த 4ம் தேதி காலை மருமகன் ரகு, வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு சென்றிருந்த நிலையில், துாக்கத்தில் இருந்து எழுந்த மூதாட்டி ராணி சுவிட்ச் போட்டுள்ளார்.அப்போது, திடீரென வீடு முழுதும் தீப்பற்றி எரிந்தது. இதில், ராணி மற்றும் துாங்கி கொண்டிருந்த முனுசாமி, சாந்தி, அஜித்குமார் ஆகியோர் சிக்கி கொண்டனர். அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் மீட்டு, மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேடவாக்கம் போலீசாரின் விசாரணையில், சமையல் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, வீடு முழுதும் காஸ் பரவி இருந்த நிலையில், மூதாட்டி லைட் போட சுவிட்ச் ஆன் செய்யவும், தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.கடந்த 11ம் தேதி சிகிச்சை பலனின்றி முனுசாமி, சாந்தி, அஜித்குமார் ஆகியோர் உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ராணியும் நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ