உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ்கள்

அரசு மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ்கள்

ராயபுரம்:ராயபுரத்தில், ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனை, 1914ம் ஆண்டு முதல், 74 படுக்கைகள், 46 பணியாளர்களுடன் செயல்பட துவங்கியது. கடந்த 2021ம் ஆண்டு முதல், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு கட்டடம் கட்டப்பட்டு, தற்போது, 610 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.சென்னை மட்டுமின்றி திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், பெண்கள் பிரசவத்திற்காக வருகின்றனர். மாதந்தோறும் 1,200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. சென்னையில், குழந்தை பிறப்பு விகிதத்தில், இந்த மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது.இந்நிலையில், கர்ப்பிணியர் பயன்பெறும் வகையில், ரோட்டரி கிளப் சார்பில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், இலவச தாய் சேய் ஆம்புலன்ஸ்கள், இந்த மருத்துவமனைக்கு நேற்று வழங்கப்பட்டது.வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர் ஆகியோர் இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தனர். நிகழ்வில், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை கண்காணிப்பாளர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை