உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பக்கவாத பாதிப்புக்கு இலவச மருத்துவ முகாம்

பக்கவாத பாதிப்புக்கு இலவச மருத்துவ முகாம்

சென்னை:போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், பக்கவாத பாதிப்புக்கு இலவச மருத்துவ முகாம் நடக்க உள்ளது.மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:பக்கவாத பாதிப்பு அடைந்த மற்றும் பிற நரம்பியல் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், ராமச்சந்திரா மறுவாழ்வு மையத்தில், வரும் 29ம் தேதி காலை 9:00 முதல் 3:00 மணி வரை நடக்க உள்ளது. பக்கவாதத்திற்கு பின் பேசுவதற்கு, விழுங்குவதற்கு, நடப்பதற்கு, கேட்பதற்கு, அன்றாட பணி செய்வதற்கு, ஞாபகம் வைத்துக்கொள்ள, படிக்க, எழுத சிரமப்படுபவோர், பிற நரம்பியல் நோய் தொல்லைகள் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.இந்த முகாம், ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் அவரசர சிகிச்சை பிரிவுக்கு எதிரே உள்ள, 'அனெக்ஸ்' கட்டடத்தின் முதல் மாடியில் நடைபெறும். சிகிச்சை சார் படிவங்கள் உள்ளவர்கள் எடுத்து வரவும். பதிவுக்கு, 99401 84280 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !