இலவச தையல் பயிற்சி
மடிப்பாக்கம், மடிப்பாக்கம், சத்ய சாய் சமிதியில் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புகள், பல ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. முற்றிலும் கட்டணமில்லா இந்த தொடர் சேவையின் அடுத்த தையல் பயிற்சி வகுப்பு, வரும் 29ம் தேதி முதல் துவங்குகிறது. இதற்கு அடிப்படை கல்வி தேவையில்லை. ஐந்து மாதங்கள் நடக்கும் இந்த பயிற்சி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி நாட்களில், காலை 10:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடத்தப்படும்.பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் 97918 23805 மற்றும் 97109 10542 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.