உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

பூந்தமல்லி,:பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம், ப்ளூ கிராஸ் மற்றும் ஹெச்.சி.எல்., பவுண்டேஷன் சார்பில், செல்ல பிராணிகளுக்கான மூன்று நாள் இலவச தடுப்பூசி முகாமை, நேற்று பூந்தமல்லி பழைய நகராட்சி அலுவலக கட்டடத்தில் துவக்கினர்.முகாமில் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து, தடுப்பூசி போடப்பட்டது. வரும் 15ம் தேதி வரை நடக்கும் இந்த முகாமில், தெரு நாய் உள்ளிட்ட தங்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளை அழைத்து வந்து இலவசமாக சிகிச்சை அளித்து, 'ரேபிஸ்' தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ