நில அபகரிப்பு வழக்கு தலைமறைவு நபர் கைது
சென்னை,காரம்பாக்கம், அருணாச்சலம் நகரில், பிரதீபன் என்பவருக்கு, 1,456 சதுரடியில் நிலம் மற்றும் வீடு உள்ளது. கடந்த 2014ல் குடும்பத்துடன் ஜெர்மன் நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அவரது வீட்டை விற்பனை செய்வதற்காக, நண்பர் ருத்ரன், அவரது சகோதரர் நாகராஜன், 37, ஆகியோருக்கு, அசல் ஆவணங்களை ஜெர்மனியில் இருந்து அனுப்பினார்.ஆனால் ருத்ரன், நாகராஜன் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டு, நிலத்தை சொந்தமாக்கி ஆவணங்களை தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து, 46.60 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர்.இதை அறிந்த பிரதீபன், போலி ஆவணம் வாயிலாக, தன் 80 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார்.விசாரித்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ருத்ரன், 34, என்பவரை, பிப்., 5ம் தேதி கைது செய்தனர்.தலைமறைவாக இருந்த அவரது சகோதரர் நாகராஜனை, நேற்று கைது செய்தனர்.