உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஆர்.எப்., தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டல் சமரச பேச்சு மீண்டும் தோல்வி

எம்.ஆர்.எப்., தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டல் சமரச பேச்சு மீண்டும் தோல்வி

எண்ணுார், மருத்துவ காப்பீடு முன்பண தொகைக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்.ஆர்.எப்., தொழிலாளர்களுக்காக, எண்ணுார் பவுண்டரி தொழிலாளர்கள் நிதி திரட்டினர். திருவொற்றியூ ர், விம்கோ நகரில் செயல்பட்டு வரும், எம்.ஆர்.எப்., டயர் தயாரிப்பு தொழிற்சாலையில், 61 பயிற்சியாளர்கள் உட்பட, 820 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நிறுவனம் சார்பில், தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும், மருத்துவ காப்பீட்டுக்கான முன்பணத்தொகை, இந்தாண்டு வழங்கப்படாததை கண்டித்து, செப்., 10ம் தேதி முதல், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும், எம்.ஆர்.எப்., தொழிலாளர்களுக்கு உதவிடும் பொருட்டு, அசோக் லேலண்ட் பவுண்டரி டிவிஷன், எண்ணுார் யூனிட் தொழிலாளர்களின் சி.ஐ.டி.யு., அணி சார்பில், மாவட்ட துணைச் செயலர் தனுஷ்கோடி தலைமையில், அந்நிறுவன வாயிலில், நிதி திரட்டும் நிகழ்வு நேற்று நடந்தது. அதன்படி, பணிக்குச் சென்ற பவுண்டரி தொழிலாளர்கள், எம்.ஆர்.எப்., தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவி வழங்கி சென்றனர். இதற்கிடையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள், நேற்று, 19வது நாளாக போராட்டம் நடத்தினர். மாலையில், தேனாம்பேட்டை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், நடைபெற்ற முத்தரப்பு பேச்சு மீண்டும் தோல்வியில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !